எட்டுவழிச் சாலை: எதிர்ப்புகள் ஏன்?

Total Views : 55
Zoom In Zoom Out Read Later Print

புதிய யுத்தம் ஒன்று தற்போது தமிழகத்தில் தொடங்கியிருக்கிறது. தொழில் வளர்ச்சியும், விவசாய வளர்ச்சியும் சண்டையிட்டுக்கொள்கின்றன. கார்களும் பயிர்களும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.

கனிம வளமிக்க மலைகள், அதைச் சுரண்டி எடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகக் களம் காண்கின்றன.  அரசின் அதிகாரமும் விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டமும் சண்டையிட்டுக்கொள்கின்றன. சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம், ஐந்து மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

மனிதகுல வரலாற்றில் தொழில் வளர்ச்சி, வாகனங்களின் பெருக்கம் ஆகியவை சாலைகளின் விரிவாக்கத்துக்கு வித்திட்டன. ஆனால் அதேநேரத்தில் சுற்றுச்சூழலைச் சிதைத்து, விளைநிலங்களை அழிக்கும் இத்தகைய வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக உலகம் முழுக்கவே எதிர்ப்புகள் எழுந்தன. பல திட்டங்கள் இதன் காரணமாகக் கைவிடப்பட்டன. சமீப வருடங்களாக உலகின் பல நாடுகளும் நெடுஞ்சாலைகள் அமைப்பதை நிறுத்திவைத்துள்ளன. குறிப்பாக, அமெரிக்கா.  நிலங்களைக் கையகப்படுத்துவது, மக்கள் எதிர்ப்பு, சூழலியல் சிக்கல்கள் காரணமாக இந்த நெடுஞ்சாலைத் திட்டங்களை மொத்தமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.


மேலும் படிக்க


See More

Latest Photos