அடேங்கப்பா.. 100 கோடி பேர் கிரிக்கெட்டைப் பார்க்கிறார்களாமே!

Total Views : 30
Zoom In Zoom Out Read Later Print

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று, கிரிக்கெட் குறித்த ஒரு பிரமாண்ட ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. படு சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கியதாக இது அமைந்துள்ளது.

உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேற்பட்டோர் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 முதல் 69 வயதிற்குட்பட்டவர்களிடையே இந்த, ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு கிரிக்கெட் ரசிகனின் சராசரி வயது 34 என்று ஐசிசி தலைமை அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.

பெண் ரசிகர்கள்

கிரிக்கெட் ரசிகர்களில் 39% ரசிகர்கள் பெண்கள் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 கோடி பேரிடம் இந்த ஆன்லைன் ஆய்வு நடத்தப்பட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

ஏன் இந்த ஆய்வு

கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலத்தை கணக்கிடவும், கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகளாவிய சந்தையை விரிவுபடுத்தவும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் கிரிக்கெட் உலகளவில் பிரபலமான விளையாட்டு எனவும் ஐசிசி சுட்டிக் காட்டியுள்ளதாக கருதப்படுகிறது.

உலகக் கோப்பை போட்டிகள் மீது ஆர்வம்

16 வயதிற்கு மேற்பட்டவர்களிடம், எந்த வகையான போட்டிகளில் (டெஸ்ட் , ஒருநாள் மற்றும் டி20) நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் 95% ரசிகர்கள் ஆர்வமாக மற்றும் மிக ஆர்வமாக இருப்பது தெரியவந்துள்ளது.

மகளிர் கிரிக்கெட்டுக்கு ஆதரவு அதிகம்

மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆதரவு பெருகி வருகிறது இதில் குறிப்பிடத்தகுந்த அம்சம். மூன்றில் இரண்டு பங்கு ரசிகர்கள் மகளிர் கிரிக்கெட் (68%) மற்றும் மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் (65%) ஆகியவற்றில் ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும் 70% ரசிகர்கள் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நேரலையில் ஒளிபரப்பவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

டெஸ்ட்டுக்கு ஆதரவு

பொலிவிழந்து வருவதாக கூறப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கு 70% ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இல் இருந்து அதிகப்படியான ரசிகர்கள் (86%) டெஸ்ட் போட்டிகளுக்கு வலுவான ஆதரவு அளித்துள்ளார்கள். தென்னாபிரிக்கா நாட்டில் அதிகபட்சமாக 91% பேர் ஒருநாள் போட்டிகளுக்கும், பாகிஸ்தானில் 98% பேர் 20 ஓவர் போட்டிகளுக்கும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டி20 டாப்!

அதேசமயம், டுவென்டி 20 போட்டிகள்தான் அனைவரது ஆதரவையும் பெருமளவில் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 92% ரசிகர்கள் டி20 போட்டிகளுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஒருநாள் போட்டிகளுக்கு 88% ரசிகர்கள் ஆதரவளித்துள்ளனர்.

ஒலிம்பிக்கில் சேருங்க

டி20 போட்டிகளை ஒலிம்பிக்கில் சேர்க்கவேண்டும் என்று 87% ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஐசிசியின் இந்த ஆய்வு முடிவுகளை வைத்து பல விவாதங்களும் கிளம்பியுள்ளன.

Source : https://tamil.mykhel.com/cricket/interesting-facts-about-cricket-fans/articlecontent-pf24068-010705.html

See More

Latest Photos