அயர்லாந்தை அல்வா போல 'ஸ்வாகா' செய்த இந்தியா.. முதல் டி20 போட்டியில் ரோகித், தவான், குல்தீப் அபாரம்

Total Views : 42
Zoom In Zoom Out Read Later Print

டப்ளின்: அயர்லாந்துக்கு எதிராக அந்த நாட்டில், நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அயர்லாந்து சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தையடுத்து இந்தியாவின் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இழந்த ஃபார்மை மீட்ட ரோகித் ஷர்மா

'சிறுவர்கள்' சிக்கிய மகிழ்ச்சியில் இருவரும் தொடக்கம் முதலே அடி வெளுத்து வாங்கினர்.இழந்த ஃபார்மை அயர்லாந்து பவுலர்களை வைத்து மீட்டுக்கொண்ட ரோகித் ஷர்மா, 61 பந்தில் 97 ரன்கள் குவித்து அவுட்டானார். முன்னதாக தவான் 45 பந்தில் 74 ரன்கள் குவித்து வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 160 ரன்கள் எடுத்து அயர்லாந்து வீரர்களின் நம்பிக்கையை நிலை குலைத்தது.

தோனி, பாண்ட்யா அதிரடி

ரெய்னா 10, தோனி 5 பந்துகளில் 1 சிக்சர், 1 பவுண்டரியுடன், 11, கோஹ்லி 0 ரன்கள் எடுக்க, ஹர்திக்பாண்ட்யா சந்தித்த ஒரே பந்தையும் சிக்சராக்கியபடி ஆட்டமிளக்காமல் மணிஷ் பாண்டேவுடன், களத்தில் நின்றார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் பீட்டர் சேஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

ஆரம்பமே அதிர்ச்சி

இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய வந்த அயர்லாந்து அணியின் தொடக்க வீரர் பால் ஸ்டிர்லிங் 1 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பால் பிர்னி 11 ரன்னிலும், சிமி சிங் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் ஜேம்ஸ் ஷன்னான் மட்டும் சிறப்பாக ஆடி 35 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 5 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் இதில் அடங்கும்.

குல்தீப் யாதவ் அபாரம்

இறுதியில் அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.. இதனால் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், சஹால் 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 2வது டி20 போட்டி 29ம் தேதி நடைபெறுகிறது.

Source : https://tamil.mykhel.com/cricket/india-vs-ireland-ist-t20-result-dhawan-rohit-kuldeep-pow-010714.html

See More

Latest Photos