சர்க்கரைவள்ளி கிழங்கு பெஸ்ட்டா?... வெள்ளை உருளைக்கிழங்கு பெஸ்ட்டா?

Total Views : 82
Zoom In Zoom Out Read Later Print

உலகின் அனைத்து பகுதிகளிலும் நீக்கமற நிறைந்த உணவாக இருப்பது கிழங்கு வகைகள். இக்கிழங்கு வகையை உண்ணாத உயிரினமே இவ்வுலகில் இல்லை எனலாம். இவற்றில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம். இங்கே சக்கரவள்ளிக் கிழங்கு மற்றும் உருளைக் கிழங்கு ஆகிய கிழங்கு வகைகளில் சிறந்தது எது என்று பார்ப்போம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சக்கரவள்ளிக் கிழங்கு மற்றும் உருளைக் கிழங்கு ஆகிய கிழங்கு வகைகள் இரண்டும் மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க பகுதிகளிலிருந்தே உலகிற்கு பரவியது. பொதுவாக எல்லா வகை கிழங்குகளில் கொழுப்பு அதிகம் இருக்கும். ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கில் கொழுப்பு இல்லை. அதிக நார்சத்து உள்ளது. எனவே ஒன்று சாப்பிட்டாலும் வயிறு நிறையும். இவற்றில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம். இது சத்துக்களின் கூடாரம், இதில் அனைத்து சத்துக்களும் உள்ளன. இதில் மிகசிறந்த உயிர்ச்சத்துகளும் , விட்டமின் மற்றும் நார்ச்சத்தும் இருக்கின்றன.விட்டமின் ஏ, பி, சி, இரும்பு, பொட்டாசியம், ஆகியவை உள்ளன. இவை நல்ல உடன் நலத்தையும், சருமம், எலும்பு உருவாவதற்கும் தேவையான சத்துக்களை அளிக்கிறது. தாவரவியல் பகுப்பு, சக்கரவள்ளிக் கிழங்கு மற்றும் உருளைக் கிழங்கு ஆகிய இரண்டு வகை கிழங்குகளையும் வெவ்வேறு பிரிவுகளில் வைத்துள்ளது.

உருளைக்கிழங்கு

உருளைக் கிழங்கு சொலனாசியா குடும்பத்தைச் சேர்ந்தது. இவ்வகை செடிகள் சொலனைன் என்ற விஷத்தை வெளிப்படுத்தும். அது மட்டுமல்லாது உருளைக் கிழங்கு முலை விட்டால் அதனையும் உண்ணக்கூடாது, அதன் இலைகளையும் உண்ணக் கூடாது, ஏனென்றால் இவை இரண்டுமே விஷத்தை வெளிப்படுத்தும்.

பலன்கள்

உருளைக் கிழங்கைப் போலல்லாமல் சக்கரவள்ளிக் கிழங்கின் இலைகளையும் உண்ணலாம். அது மட்டுமல்லாது சக்கரவள்ளிக் கிழங்கு முலை விட்டால் அதனையும் உண்ணலாம். சக்கரவள்ளிக் கிழங்கு அல்லது உருளைக் கிழங்கு இவை இரன்டும் உடலுக்கு உகந்ததா? அல்லது சக்கரவள்ளிக் கிழங்கு அல்லது உருளைக் கிழங்கில் இருக்கும் கார்போஹைட்ரேட் உடலின் எடையை கூட்டாதா? என்ற கேள்வி எழலாம். இது நிச்சயமாக புத்திசாலித் தனமான கேள்வி தான், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இங்கே காணலாம்.

ஸ்டார்ச்

இவை இரண்டிலும் எதிர்ப்பு ஸ்டார்ச் என்ற சத்தும், எளிதில் செரிக்ககூடிய நார்ச்சத்தும் இருக்கின்றன. இந்த எதிர்ப்பு ஸ்டார்ச் என்ற சத்து மனித உடலில் குட்டைச் சங்கிலி கொழுப்பு அமிலம் சுரக்க உதவுகிறது. சக்கரவள்ளிக் கிழங்கில் சாதாரண உருளைக் கிழங்கை விட அதிக சர்க்கரை உள்ளது. இவை உடலுக்கு மிக உகந்தது. மாறாக உருளைக் கிழங்கை குளிர்பதன பெட்டியில் சேமித்து வைத்தால் இதிலிருக்கும் ஸ்டார்ச் சர்க்கரையாக மாறிவிடும். சக்கரவள்ளிக் கிழங்கு உடல் உள்ளுறுப்புகளில் பாதிப்பு மற்றும் வீக்கங்கள் உண்டானால் அவற்றை சரிப்படுத்தும். விட்டமின் பி,சி மற்றும் நார்ச்சத்து ஆகியவைகளை கொண்டது. அதிக சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டவை.

நன்மைகள்

உருளைக் கிழங்கிலிருக்கும் குட்டைச் சங்கிலி கொழுப்பு அமிலம் உடலின் இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது. 1) வயிற்றில் வரக்கூடிய புற்று நோயை வராமல் தடுத்து விரட்டுகிறது. 2) மனித உடல் தனக்கு தேவையான தாது உப்புக்களையும், மற்ற சத்துகளையும் கிரகிக்க உதவி புரிகிறது. 3) மனித உடல் தனக்கு தேவையற்ற விஷத்தன்மைகளை வெளித்தள்ள உதவி புரிகிறது. 4) மனித உடல் திடமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் துணை புரிகிறது.

ஆராய்ச்சி

உடலுக்கு தேவையான சத்துக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிபுணர்களான நியூட்ரீசனிஸ்ட்கள் கிளிசமிக் இன்டெக்ஸ் GI (Glycemic Index) மற்றும் கிளிசமிக் லோட் GL (Glycemic load) என்ற இரண்டு விஷயங்களை பற்றி விரிவாக விவாதிக்கின்றனர்.

கர்ப்ப காலம்

கர்ப்ப காலத்தில் சர்க்கரை வள்ளிக் கிழங்கை சாப்பிடுவதால், அதிலுள்ள ஃபோலேட் கருவளர்ச்சிக்கு உதவும். சக்கரவள்ளிக் கிழங்கு மற்றும் உருளைக் கிழங்கு ஆகிய இரு வகை கிழங்குகளிலுமே உடலுக்குத் தேவையான சத்துக்கள் சரி விகிதத்திலேயே இருக்கின்றன.

நுரையீரல் நோயை குணமாக்க

நுரையீரல் காற்றுப் பையில் எழும் பிரச்சனையின் காரணமாக வரும் நோய்தான் எம்ஃபைசீமா என்பது. இந்த நோயினால் சிறிது சிறிதாக ஆரம்பித்து மூச்சு விடுவதில் பிரச்சனை உண்டாகும். இதற்கு தினமும் சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிட்டால் இந்த நோய் குணமாகும்.

வயிற்று அல்சரை குணமாக்க

சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள அனைத்து விட்டமின்களும், மினரல்களும் வயிற்ற்ல் உண்டாகும் அல்சரை குணப்படுத்துகிறது.

எப்படிச் சாப்பிடலாம்

இந்த கிழங்கை வேக வைத்தோ, சுட வைத்தோ அல்லது சிப்ஸ் போலவோ எப்படி சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் முழுதும் கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் எண்ணெயில் பொறித்தால், அதன் சத்துக்கள் இழப்பு ஏற்படும், சத்துக்கள் சிதரும் வீனாகும் என்பதால் வேகவைத்து உண்ணுதல் சிறந்தது.

Source : https://tamil.boldsky.com/health/food/2018/sweet-potatoes-vs-white-potatoes-which-is-better/articlecontent-pf143251-021073.html

See More

Latest Photos