பாலில் மட்டும்தான் கால்சியம் இருக்கா... இந்த 7 பொருள்கள்ல அதைவிட அதிகமா இருக்கு...

Total Views : 87
Zoom In Zoom Out Read Later Print

உடலுக்கு தேவையான சத்துக்களில் கால்சியம் சத்து மிகவும் முக்கியமானது. நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கால்சியம் இருப்பதை என்பதை கவனம் வேண்டும். பாலில் மட்டும் அல்லாமல் மற்ற உணவு வகைகளிலும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. நம் உடலுக்கு கால்சியம் சத்தை உறிஞ்சிக் கொடுக்க வைட்டமின் D தேவைப்படுகிறது. ஆதலால் வைட்டமின் D சத்து நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடுவது நாம் உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்கும் .

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ சத்து மட்டுமின்றி, 70-80 சதவீத கால்சியம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு பாதாமை சாப்பிட்டு, உடலில் கால்சியத்தை அதிகரியுங்கள். பாலிற்கு அடுத்தபடியாக கால்சியம் சத்து மிகுந்தது பாதாம் தான். ஒரு பாதாமில் 457 mg கால்சியம் சத்து நிறைந்துள்ளது .

பச்சை இலைக்காய்கறிகள்

பால் பொருட்களைத் தவிர, கால்சியம் சத்தானது பச்சை இலைக் காய்கறிகளில் நிறைந்துள்ளது. அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றை அளவுக்கு அதிமான அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. ஒரு கட்டு பச்சை இலைக்காய்கறியில் 336 mg கால்சியம் சத்து நிறைந்துள்ளது

சாலமன் மீன்

பொதுவாக அனைத்து கடல் உணவுகளிலும் கால்சியம் ஆக்சலேட் என்னும் பொருள் உள்ளது.சாலமன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதோடு, இந்த மீன் கடல் நீரில் உள்ள கனிமச் சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதால், இதனை முள்ளோடு சாப்பிட வேண்டும். இதில் கால்சியம் குறைவாக இருப்பினும், உடலுக்கு வேண்டிய மற்ற அனைத்து சத்துக்களையும் பெறலாம்.

சீஸ்

பால் பொருட்களில் ஒன்றான சீஸ் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. ஒரு கப் சீஸ்யில் 951mg கால்சியம் சத்து நிரம்பியது

ஆரஞ்சு

நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிப்பதில் ஆரஞ்சு உதவுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆரஞ்சு பழத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் சத்து அதிகம் உள்ளது. ஒரு ஆரஞ்சு பழத்தில் 60 mg கால்சியம் சத்து அடங்கியுள்ளது. வைட்டமின் D சத்து நிறைந்த ஆரஞ்சு நாம் சாப்பிடுவது நம் உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்கும் .

சியா விதைகள்

சியா விதைகள் உள்ள கால்சியம் எலும்பு ஆரோக்கியம் மற்றும் எலும்பு வலிமை பராமரிக்க உதவுகிறது. சியா விதைகள் உடலை சுத்தப்படுத்தி இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன. நீங்கள் சியா விதைகளை முட்டைகளில், குளிர் பானத்திலும் சேர்த்து நம் உணவில் எடுத்துக் கொள்ளலாம் .

வெள்ளை மற்றும் கருப்பு கொண்டைக்கடலை

1/2 கப் வெள்ளைக் கொண்டைக்கடலை 100 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. பொதுவாக கால்சியம் குறைபாடானது ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். ஏனெனில் மாதம் மாதம் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதால், அதிலேயே பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். மேலும் பிரசவத்தின் போதும் நிறைய் கால்சியமானது போய்விடும். எனவே ஆண்களை விட பெண்கள் கால்சியம் உணவுகளை சாப்பிடுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது.See More

Latest Photos